”டைட்டானிக்” 100.

மிகப்பெரிய உல்லாச கப்பலான டைட்டானிக் மூழ்கி
100 ஆண்டுகளை அடையப்போகிறது, ஆம் அந்த பேரழிவு நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டன, ஏப்ரல் 10, 1912 அன்று  இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனிலிருந்து நியுயார்க் நோக்கி புறப்பட்ட டைட்டானிக் கப்பலில் மிகப்பெரிய பணக்காரர்களும், வியாபாரிகளும், பத்திரிக்கையாளர்களும் பயணித்தனர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அமெரிக்க தொழிலதிபர் பெஞ்சமின் கக்கென்ஹீம், பிரிட்டிஷ் பத்திரிகையாளர் வில்லியம் தாமஸ் ஸ்டெட், மற்றும் மேசி. ஒரு பல்பொருள் அங்காடி இணை உரிமையாளர்  ஸ்ட்ராஸ் மற்றும் அவரது மனைவி, ஐடா உட்பட முக்கிய நபர்கள், பலர் இருந்தனர். 



ஏப்ரல் 14ம் தேதி அந்த அகோர விபத்து அரங்கேறியது, டைட்டானிக் கப்பல் ஒரு பனி மலையில் மோதி விபத்துக்குள்ளானது, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கி ஏப்ரல் 15 காலையில் கப்பல் மூழ்கியது. சுமார் 2223 பயனிகள் பயனித்த கப்பலில் 1517 பேர் இறந்தனர். சுமார் 76% பேர் வரை இறந்துள்ளனர்.
இந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமருன் இயக்கிய ”டைட்டானிக்” திரைப்படம் 1997 ம் வருடம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது. மேலும் 11 ஆஸ்கர் விருதுகளையும் அள்ளியது. இதனிடையே
ஜேம்ஸ் கேமருன் ”டைட்டானிக்” ஐ மறு வெளியீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். இந்த சோக காவியம் மறுபடியும் எத்தனை சாதனைகள் செய்ய காத்திருக்கிறதோ!....

இந்த பதிவு பிடித்திருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டையில் வாக்களியுங்கள் நன்றி.  

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More