பெட்ரோல் மனிதன்!

பெட்ரோல் விக்கிற விலையில இவரமாதிரி ஆளுங்க இருந்தால் ஏன் பெட்ரோல் விலை ஏறாது,
கார்கள், ஆட்டோக்கள், மோட்டார் பைக்குகள் மற்றும் அனைத்து வாகனங்களும் பெட்ரோல் அல்லது டீசல் மூலமாக இயங்குகின்றன,இந்த எரிபொருள்தான் இந்த வாகனங்களின் உணவு, இது இல்லாமல் அவை இயங்க முடியாது.பெட்ரோல்,டீசல் போன்ற எரிபொருள்கள்  வாகனங்களுக்கு ஆற்றலை வழங்குகிறது. ஆனால் இங்கு ஒருமனிதன் ஆரோக்கியமாக வாழ பெட்ரோலை குடிக்கிறார்.



சீனாவில் உள்ள சென் டீன் என்பவர் கடந்த 42 ஆண்டுகளாக பெட்ரோலை குடித்து வாழ்ந்து வருகிறார், இதை அவர் ஒரு பொழுது போக்காக செய்யவில்லை உணவுக்காகவே செய்து வருகிறார் ஆரம்பத்தில்  ஒரு மருந்தாக எடுத்து தொடங்கி இப்போது அவர் அடிமையாகிவிட்டார், 1969 ல் நெஞ்சு பகுதியில் வலி ஏற்ப்பட்டபோது அங்குள்ள கிராமவாசிகள் காசநோய் எனகூறி மண்ணென்னையை குடிக்க சொன்னார்களாம்,2001 ஆம் ஆண்டு மண்ணென்னை பெறுவதில் சிரமம் ஏற்படவே நாளடைவில் மண்ணென்னைக்கு பதில் பெட்ரோலை குடிக்கதொடங்கினார்.
சென் டீன் இவர் தென் மேற்கு சீனாவின்  சோங்கிங் மாவட்டத்தில் உள்ள மலையில் வசித்து வருகிறார். அவருக்கு 71 வயது ஆகிறது, மருத்துவர்கள் அவரை பரிசோதித்து அவரது உடல் நிலையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு  எதிராக அவரது உடலில் பெட்ரோல் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி வருகிறது. என்று கூறியுள்ளனர்.கடந்த 42 ஆண்டுகளில் இந்த  1.5 டன் அளவு பெட்ரோலை குடித்திருக்கிறார். இதனால் அவரது அனைத்து குடும்ப உறுப்பினர்கள் அவரை விட்டு  பிரிந்து சென்றுவிட்டனர், கடந்த 8 ஆண்டுகளாக அவர் குடிசையில் தனியாக வசித்து வருகிறார்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More