சீனாவில் உலகிலேயே பெரிய ஷாப்பிங் மால்!

 உலகிலேயே மிகப் பெரிய விற்பனை வளாகத்தை நிறுவ சீனா முடிவு செய்துள்ளது.


 சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள டியான்ஜின் நகரில் இந்த விற்பனை வளாகம் அமைய உள்ளது. இதனை பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த எஸ்எம் குழுமம் நிறுவ உள்ளது. எஸ்எம் குழுமத்தினர் கடந்த சனிக்கிழமை கட்டடம் கட்டும் வேலையைத் துவக்கியுள்ளனர். இது 2013-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று டியான்ஜின் நகர அரசு தெரிவித்துள்ளது.
 இந்தக் கட்டடத்தின் தோராய மதிப்பு ரூ.2400 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது சீனாவில் முதலீடு செய்யும் ஒரு நிறுவனத்தின் அதிகபட்ச தொகையாகும்.
 இந்த வளாகம் மூன்று நீள்வட்ட கட்டடங்களுடன் ஒரு வட்ட வடிவான அமைப்பைக் கொண்டிருக்கும். இதன் பரப்பு 74 கால்பந்து மைதானத்தை விடப் பெரிய அளவில் இருக்கும் என்று ஸின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கிலிருந்து டியான்ஜெனுக்கு, அதிவேக ரயிலில் 30 நிமிடத்துக்குள்ளும், வாகனத்தில் 2 மணி நேரத்துக்குள்ளும் சென்றடைய முடியும்.
 எஸ்எம் குழுமம் ஹென்றி என்பவரால் அமைக்கப்பட்டது. இவரை கடந்த ஆண்டு பிலிப்பின்ஸ் நாட்டின் பணக்காரராக ஃபர்பீஸ் மேகஸின் தேர்வு செய்துள்ளது. இந்த குழுமத்துக்கு 46 விற்பனை வளாகங்கள் சீனாவிலும், பிலிப்பின்ஸிலும் உள்ளன. இதில் மூன்று வளாகம் உலகின் பெரிய வளாகங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More