
என்னடா, ஒரு மில்லபற்றி எழுதுரானே , நாம பாக்காத மில்லா எத்தனை ரைஸ்மில்ல பாத்திருப்போம் எத்தனை மாவு மில்ல பாத்திருப்போம் எத்தனை மர மில்ல பாத்திருப்போம்ன்னு நீங்க நினைக்கலாம், உங்களில் சிலர் கேள்விபட்டிருக்கலாம் சிலருக்கு தெரியாமகூட இருக்கலாம் தெரிஞ்சவங்களுக்கு சரி ஆனால் தெரியாதவங்களுக்காகதான் இந்த பதிவை எழுதுகிறேன் நண்பர்களே,

“சாத்தம் அறுவை மில்” இது வரலாற்றின் மிகப்பெரிய நினைவுகளை சுமந்து கொண்டிருக்கிறது, பன்டைய காலத்தில் எ ங்கு செல்வங்கள் கொட்டிகிடக்கு அதை எப்படி நம்நாட்டுக்கு கொண்டுபோகலாம் என்று திரிந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைபடுத்திய பிறகு இங்குள்ள இயற்கைவளங்களை கொள்ளையடிக்கும் விதமாக அந்தமான்-நிகோபார் தீவுகளில் உள்ள மிக உயர்ந்த மற்றும் விலை மதிக்கமுடியாத அரிய மரங்களான “பாடாக் ” இதை “அந்தமான் படாக்” என்றே கூறுவார்கள் அந்த அரிய மரங்களை தங்கள் நாட்டின் கட்டிட வேலைகளுக்கு பயன்படுத்த திட்டமிட்ட அவர்கள் அந்த மரங்களை வெட்டி தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றனர். முழு மரமாக கொண்டு செல்வதில் மிகவும் சிறமம் ஏற்படவே , மரங்களை அறுத்து கொண்டு செல்ல தீர்மானித்து, போர்ட் பிளேயரிலிருந்து சுமார் 5 கி.மீ துரத்தில் உள்ள சாத்தம் எனும் தீவில் மிக பிரம்மாண்டமாக, அத்தீவின் பரப்பளவில் 40% அளவுக்கு மிகப்பெரிய அறுவைமில்லை 1888 ம் ஆண்டு கட்டி அதிலிருந்து இந்த மரங்களை அறுத்து தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றதோடு மட்டுமல்லாமல் அதை மேற்கத்திய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து விற்பனை செய்தனர். அந்தமான்-நிகோபார் தீவுகளில் அறுக்கபட்ட படாக் மரத்தினால் அமைக்கபட்ட மரச்சுவர்கள்தான் இன்றளவும் இங்கிலாந்தின் பக்கிங்காம் அரன்மனையில் உள்ளன என்பதும் குறிப்பிடதகுந்த விஷயம்.


இரண்டாம் உலகப் போரின்போது, அதாவது, 1942-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி இந்த மர அறுவை ஆலையின் மீது ஜப்பானியர்கள் சரமாரி குண்டு மழை பொழிந்தனர். ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் பலர் கருகி இறந்ததோடு... கடல் கொந்தளித்து வெளிக்கிளம்பி, பாறைகளும் வெடித்துச் சிதறியிருக்கின்றன. இதனால் முற்றிலும் முடங்கிப்போன ஆலை, ஜப்பானியர்களிடம் இருந்து அந்தமான் மீட்கப்பட்ட 1946-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. ஆம் அன்று பழமையான இயந்திரங்களை கொண்டு இயங்கிய இந்த ஆலை இன்று அதிநவீன இயந்திரங்களுடன் இயங்கிவருகிறது. தற்போதைய சூழலில் மரங்களை வெட்டுகிறார்களே என நினைக்கவேண்டாம் எவ்வளவு மரங்களை வெட்டுகிறார்களோ அதைவிட கூடுதலாக மூன்று மடங்கு மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். மேலும் ஆசியாவிலே மிகப்பெரிய மரம் அறுக்கும் ஆலை இதுதான் என்பதும் குறிப்பிடதகுந்த விஷயம்.
நன்றி மீண்டும் சந்திப்போம்- S.ராஜ்குமார்
4 comments:
உண்மையிலே தெரியாதுங்க...
/// மூன்று மடங்கு மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். ///
அது தான் மிக்க சந்தோசம்...
வருகைக்கு நன்றி தனபாலன் சார்.
அருமையான தகவல்கள்.....இது போன்ற விஷயங்கள்தான் வரலாற்று சம்பவங்கள் ஆகின்றன
வருகைக்கு நன்றி தியாகராஜன் சார்
Post a Comment