தாஜ்மஹால்:
உலக அதிசயங்களில் ஒன்று, தனது காதல் மனைவிக்காக முகலாய மண்ணன் ஷாஜகானால் கட்டப்பட்டது. டெல்லியின் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது இந்த தாஜ்மஹால். இதை கட்டி முடிக்க 22 ஆண்டுகள் தேவைப்பட்டது ஷாஜகானுக்கு, இதைக்கான வெளிநாட்டிலிருந்தும் உள்நாட்டிலிருந்தும் ஏகப்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துகொண்டிருக்கின்றனர்.

ஜெய்ப்பூர்:
இந்தியாவின் பிங்க் சிட்டி என அழைக்கப்படும் நகரம்.இது ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகும், ஜெய்ப்பூர் இந்தியாவில் மிகவும் பிரபலமான சுற்றுலா மற்றும் கல்விபயிலும் இடமாகும்.ஜெய்ப்பூரில் பல்வேறு கோட்டைகள் மற்றும் நினைவு சின்னங்கள் பல உள்ளன, மேலும் இங்கு உலகின் சிறந்த ஹோட்டல்கள் சில இங்கே அமைந்துள்ளன.வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்த செல்கின்றனர்.

கோவா:
இந்தியாவின் மிகச்சிறந்த கடற்கரை சுற்றுலாதளம், இங்கு வரும் வெளிநாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அளவே இல்லை அதிக அளவில் வந்த செல்கின்றனர். மிக அழகிய நகரமான கோவா வில் இரண்டு சீசன்களில் அதாவது குளிர் காலத்தில், வெளிநாடுகளில் (முக்கியமாக ஐரோப்பா) சுற்றுலா பயணிகள் சிறப்பான தட்பவெப்ப சூழலை அனுபவித்து மகிழ வருகின்றனர். கோடைகாலத்தில், இந்தியா முழுவதும் சுற்றுலா பயணிகள் விடுமுறையை கழிக்க வருகின்றனர்.

காஷ்மீர்:
பூமியின் சொர்க்கம் என அழைக்கப்படுகிறது காஷ்மீர், உலகின் மிக அழகான இடங்கள் இங்குஅமைந்துள்ளன, எனினும் இங்கு நடைபெறும் பயங்கரவாதம் அதன் அழகை வாட்டிவதைக்கிறது. இங்கும் ஏராளமான சுற்றுலா பயனிகள் வந்து செல்கின்றனர்.

கன்ணியாகுமரி:
தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாதளம், முக்கடல்களின் சங்கமம் என எல்லோராலும் அழைக்கப்படுவது,மேலும் இங்கு சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகியவற்றைகான ஏராளமான சுற்றுலா பயனிகள் வந்து செல்கின்றனர்.திருவள்ளுவர் சிலை,விவேகானந்தர் பாறை ஆகியவற்றிற்கு படகு போக்குவரத்தும் உள்ளது.

கேரளா:
கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட நகரம் என அழைக்கப்படும், இந்தியாவின் அழகான மாநிலம்.இங்கு ஏராளமான கோவில்களும் கடற்கரையும் எப்பொழுதும் பச்சை பசேலன இருக்கும் கேரளா இந்தியாவின் மிகச்சிறந்த சுற்றுலாதளமாக அறியப்படுகிறது.

தில்லி:
இந்தியாவின் தலைநகரம் தில்லி. மசூதிகள், கோட்டைகள் மற்றும் இந்திய வரலாற்றில் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்ற நினைவுச்சின்னங்கள் போன்ற பல இடங்கள் உள்ளன. பழைய தில்லி முக்கிய இடங்களில் கம்பீரமான செங்கோட்டையும் அடங்கும்.மறுபுறம் புது தில்லி வரலாற்று இடங்களை தவிர,மற்ற பகுதிகளில் பல அரசாங்க கட்டிடங்கள் மற்றும் தூதரகங்கள் உள்ளன.மேலும் இங்கு குதுப் மினார், செங்கோட்டை மற்றும் ஹூமாயூன் கல்லறை போன்ற அழகான இடங்களும் உண்டு.

அஜந்தா&எல்லோரா குகை ஓவியங்கள்:
மகாராஷ்டிரா மாநிலமான அவுரங்காபாத் மாவட்டத்தின் அஜந்தா / எல்லோரா கிராமத்தில் வெளியே அமைந்துள்ளன. இக் குகை ஓவியங்கள்,நினைவுச்சின்னங்கள் புத்த மத கலையை பின்பற்றியே உள்ளன,1983 ல் இருந்து, அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக உள்ளது.

டார்ஜெலிங்:
இந்தியாவில் உள்ள சிறந்த குளிர் பிரதேசமாகும்,இங்கு ஏராளமான மலை தொடர்களும், பனி சிகரங்களும் உள்ளன, காலையில் இருமலைகளுக்கு நடுவே சூரியன் உதிப்பது மிகவும் அழகாக காட்சியளிக்கிறது. மேலும் இதைக்கான வெளிநாட்டிலிருந்தும் உள்நாட்டிலிருந்தும் ஏகப்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துகொண்டிருக்கின்றனர்.

மைசூர்:
கர்நாடகா மாநிலத்தின் மிகச்சிறந்த சுற்றுலாதளமாகும், இங்கு உள்ள மைசூர் அரண்மனை,சாமுன்டிஸ்வரி கோவில் ஆகியவை முக்கிமானது ஆகும், மேலும் 10 நாட்கள் நடைபெறும் தசரா பண்டிகையை கான ஏராளமானோர் வருகின்றனர்.

இந்த பதிவு பிடித்திருந்தால் கீழே உள்ள ஓட்டுபெட்டியில் ஓட்டளியுங்கள்
0 comments:
Post a Comment