உலகின் மிகப்பெரிய பாலம் சீனாவில் திறப்பு..

உலகிலேயே மிகவும் நீளமான மற்றும் உயரமான பாலத்தை சீனா கட்டியுள்ளது. இந்த பாலத்தின் திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது.

உலகின் மிகப்பெரிய பாலம்


சீனாவில் உள்ள ஹூனான் மாகாணத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் 1,102 அடி உயரமும், 3,858 அடி நீளமும் கொண்டதாகும். இந்தப் பாலம் கட்டுவதற்கான பணி கடந்த 2007 ம் ஆண்டு துவங்கியது. கடந்த ஆண்டு இறுதியில் இந்தப் பாலம் கட்டும் பணிகள் நிறைவு பெற்றது. இந்தப் பாலம் 2 சுரங்கப் பாதைகளையும் இணைக்கிறது.இந்தப் பாலத்தின் திறப்பு விழா கடந்த இரு நாட்களுக்கு முன் நடைபெற்றது. இரு மலைகளுக்கு இடையே இந்த தொங்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. இரவில் இந்த பாலம் ஜொலிக்கும் வண்ணம் 1,868 விளக்குகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
Download image 1
Download image2
Download image 3
Download image 4
4 வழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் கார், லாரி, பஸ், கனரக வாகனங்கள் ஆகியவை இருபுறங்களிலும், 50 கி.மீ. வேகத்தில் செல்லும் வண்ணம் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாலத்தில் கடந்து செல்ல விரும்புபவர்களுக்காக தனியாக பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More