கோல்டன் கேட் பாலம்:
கோல்டன் கேட் பாலம், பசிபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் மொத்த நீளம் 1.7 மைல்கள் ஆகும். 1937-ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது. மேலும் இப்பாலமே சான் பிரான்சிஸ்கோவின் சின்னமாக விளங்கியது.
வெர்சோனா குறுக்கு பாலம்(Verrazano-Narrows Bridge)
போககுவரத்துநெரிசலை சமாளிப்பதற்காக 1976 ஆம் ஆண்டு நியூயார்க்கில் கட்டப்பட்டது . இந்த பாலத்தின் கீழ் வழியாகத்தான் நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி துறைமுகங்களுக்கு கப்பல்கள் வருகின்றன, மேலும் இந்த பாலம்தான் நியூயார்க் மாராத்தான் போட்டிகளுக்கு தொடக்க எல்லையாக இருக்கின்றது.
சிங் மா பாலம்:
சிங் மா பாலம் (Tsing Ma Bridge) இது ஹாங்காங்கில் உள்ள ஒரு பாலமாகும். இது உலகில் உள்ள ஏழாவது மிக நீளமான தொங்கு பாலம் ஆகும். இப்பாலம் ஹாங்காங் பன்னாட்டு விமான நிலையத்தலிருந்து ஹாங்காங் தீவு மற்றும் கவ்லூண் புதிய கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு செல்வதற்காக அமைக்கப்பட்ட பாலமாகும். இப்பாலம் இரண்டு தட்டுகளைக் கொண்டது. இரண்டிலும் தரைவழிப் போக்குவரத்து மற்றும் ரயில் பாதைகள் உள்ளன. இவ்வகையான தொங்கு பாலங்களில் இது உலகில் மிகப் பெரியதாகவும் உள்ளது. இப்பாலத்தின் நீளம் 1,377 மீட்டர்கள் (4,518 அடி), உயரம் 206 மீட்டர்கள் (676 அடி). இத்தகைய நீளமான ரயில் பாதையைக் கொண்டுள்ள பாலம் உலகில் இதுவே மிகப் பெரியதாகும்.
ஹம்பர் பாலம்:
இங்கிலாந்தில் உள்ள கிங்ஸ்டன் அருகில் ஹம்பர் பாலம் , 24 ஜூன் 1981 அன்று போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. இது 2,220 மீ உள்ள ஒற்றை தொங்கு பாலம் ஆகும். இது யார்க்ஷயர் மற்றும் வட லிங்கன்ஷையரை இனைக்கிறது.
அகாசி பாலம்:
ஜப்பானில் அமைந்துள்ள இப்பாலம் சுமார் 1.991 மீட்டர் (6,532 அடி) நீளம் உள்ளது. 1988 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. 1955 ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு புயலில் சுமார் 168 பேர் கொல்லப்பட்டனர் அதன் பிறகே பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு கட்டப்பட்டது.
0 comments:
Post a Comment