இந்தியாவின் முக்கியமான பெரிய நீர் தடுப்பனைகள் (டேம்)- 2

ஹிராகட் அணை

 

ஒரிசா மாநிலத்தின் சம்பல்பூரில் இருந்து 15 கிமீ தொலைவில் மகாநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.1957 ல் கட்டப்பட்ட இந்த அணை உலகின் மிக நீளமான, மண்ணால் செய்யப்பட்ட அணைகளில் ஒன்றாகும், அணை நீளம் சுமார் 16 மைல் (26 கிமீ) தொலைவு ஆகும். இந்த அணை இந்திய சுதந்திரத்திற்கு பிறகு தொடங்கிய முதல் பெரிய பல்நோக்கு நதி பள்ளத்தாக்கு திட்டமாகும்.


கிருஷ்னராஜசாகர் அணை

 

கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆறு மீது கட்டப்பட்ட பெரிய அணையாகும். மாண்டியா மாவட்டத்தில் கண்ணம்பாடி என்ற இடத்தில் கட்டப்பட்டதால் கண்ணம்பாடி அணை என்று அழைக்கப்பட்டது. மைசூர் மகாராஜா நான்காம் கிருஷ்ணராஜ உடையார் நினைவாக இது பின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதை வடிவமைத்து கட்டியவர் புகழ்பெற்ற இந்திய பொறியாளர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா.
ஏமாவதி மற்றும் லட்சுமண தீர்த்தம் ஆகிய 2 ஆறுகளும் கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தில் காவிரியுடன் இணைகின்றன
இவ்வணை மைசூரிலிருந்து கிட்டதட்ட 20 கிமீ தொலைவில் உள்ளது.
இங்கு புகழ் பெற்ற பிருந்தாவன் பூங்கா உள்ளது.

மேட்டூர் அணை 

 

மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இது அணையைக்கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.இந்த அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும்.  அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர்களாகும். அணையின் உயரம் 120 அடிகள். மேலும் இதன் கொள்ளளவு 93.4 டி.எம்.சி. ஆகும்.

ஸ்ரீசைலம் அணை

 


ஸ்ரீசைலம் அணை  ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் பகுதியில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை. இதுவே நாட்டின் 2 வது மிக பெரிய திறன் கொண்ட நீர்மின் திட்டமாக உள்ளது.
மொத்த நீளம் 512 மீட்டர்களாகும். அணையின் உயரம் 145 மீ  ஆகும்.

துங்கபத்ரா அணை

 

துங்கபத்ரா அணை  தென்னிந்தியாவின் புனித நதிகளுள் ஒன்று. இது  கர்நாடக மாநிலம், ஹோஸ்பேட்  நகருக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த அணையின் நீளம் சுமார் 498 மீ  இவ்வணை 101 ஆயிரம் மில்லியன் கன அடி நீரை சேமிக்கின்றது. 

கீழே உள்ள லிங்கில் 

இந்தியாவின் முக்கியமான பெரிய நீர்  தடுப்பனைகள் (டேம்)-1

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More