இந்தியாவின் முக்கியமான பெரிய நீர் தடுப்பனைகள் (டேம்)

1.டெஹ்ரி அணை:

 

உத்தர்காண்ட் மாநிலத்தில்உள்ள டெஹ்ரி அருகில் பாகீரதி நதி குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அனை நிரப்பரப்பிலிருந்து சுமார் 260 மீட்டர் (850 அடி)உள்ளது,அதன் நீளம் 575 மீட்டர் (1,886 அடி),  அகலம் 20 மீட்டர் (66 அடி) உள்ளது


2.முல்லை பெரியார் அனை:


முல்லை பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இது கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும் அணை தமிழகத்திற்கும் உரியது. தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையை பராமரித்து வருகிறது. 1895 ஆம் ஆண்டு இது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி மற்றும் உயரம் 155 அடி ஆகும். இந்த அணையின் நீர்பிடி பகுதியில் வன சரணாலயம் தேக்கடி உள்ளது. இதன் கீழ்பாசனத்தில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது.

3.பக்ரா அனை:


பக்ரா அணை சட்லெஜ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கான்கிரீட் ஈர்ப்பு அணை, வட இந்தியாவில் பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் இடையேயான எல்லை அருகே உள்ளது. இமாசல பிரதேசம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பக்ரா கிராமத்திற்கு அருகே பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இதன் உயரம் சுமார் 225.55 மீ (740அடி) ஆகும்.

4.நாகார்ஜூன சாகர் அணை :

 

 1955 மற்றும் 1967 இடையில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள நலகொண்டா மாவட்டத்தில் கிருஷ்ணா நதி குறுக்கே கட்டப்பட்ட மிகப்பெரிய அணை நாகார்ஜூன சாகர் அணை. இதன் உயரம் 150 மீ (490 அடி) ஆகும். இதில் 26 நீர் திறப்பு மதகுகள் உள்ளன.பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை கொண்ட நீர்-மின் நிலையமும் உள்ளது.

5.சர்தார் சரோவார் அணை:

 

குஜராத் மாநிலம் நவாகத்தில் நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டது.இந்த அணையின் உயரம் சுமார் 163 மீ (535 அடி) ஆகும். நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்ட 30 அணைகளில் சர்தார் சரோவார் அணைதான் (SSD) மிகப்பெரியது ஆகும். ஹைட்ராலிக் பொறியியல் திட்டத்தின் கீழ் இங்கு  நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 

அடுத்த 5 அணைகள் அடுத்தபதிவில்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More