ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியில மனுசனயும் கடிக்க போரானுங்க இந்த சீனர்கள், மார்கெட்ல புதுசா ஒரு பொருள் வந்துருச்சுன்னா அது கம்யூட்டரிலயிருந்து கக்கூஸ் கழுவுர ஆசிட் வரைக்கும் டூப்ளிகெட் செஞ்சு விக்கிறதுல சீனாக்காரனுகள அடிச்சிக்க ஆளே இல்லங்கிறது நமக்கு தெரியும். இன்னைக்கு நாம அன்றாடம் பயன் படுத்தும் அரிசியைகூட விடடுவைக்கவில்லை இந்த அறிவு ஜீவிகள், அதுலையும் போலியை கண்டு பிடிச்சு எல்லோரோட உயிருக்கும் ஆப்பு வைக்க காத்துகிட்டு இருக்கானுங்க இந்த பாவிகள்.
கலப்படம் பண்ணுவதே பெரிய தவறாக இருக்கும் போது முழுக்க முழுக்க பிளாஸ்டிக் மற்றும் உருளைக்கிழங்கையே மூலப்பொருட்களாக கொண்டு இந்த அரிசியை சீனாவில் உருவாக்கி மிகவும் மலிவான விலையில் இதை விற்பனைக்கும் வைத்து இருக்கிறார்கள்..! விலை குறைவு காரணமாக வழக்கம் போலவே மக்கள் இந்த அரிசியையே விரும்பி வாங்க..! இந்த அரிசிக்கான தேவையும் அதிகரித்து இருக்கிறது..!
மேலும் மூன்று கப் இந்த அரிசி சாதம் சாப்பிட்டால்.. ரெண்டு முழு பாலிதீன் பைகளை விழுங்கியதற்கு சமமாம்..! மீண்டும் ஒரு உலக போர்வந்தால் சீனா முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதிவரும் நிலையில் அவர்கள் எடுத்திருக்கும் ஆயதம் மிகவும் பயங்கரமான ஒன்றாக உணவுக்கான அரிசியிலேயே காட்ட தொடங்கிவிட்டார்கள்.
இதுலவேற நம்ம கவர்மென்டு சில்லரைவர்தகத்தில் அந்நிய முதலீடுன்னுங்கிற பேர்ல எல்லா நாட்டுகாரனுங்களையும் இந்தியாவுக்குள்ள விட்டு கொஞ்சநாளைக்கு நம்ம பொருள வாங்கிட்டு அப்புறம் அவன் நாட்டிலிருந்து அப்புறம் பிளாஸ்டிக் அரிசியைதான் கொண்டு வந்து விப்பான். நம்ப மக்களும் விலை குறைவா இருக்கேன்னு வாங்கிதின்னு சீக்கிறத்தல போய்சேர போறான். 1940 களில் உள்ளமாதிரி அந்நிய பொருளை வாங்கமாட்டோம்ன்னு கோசம் போட்டு இன்னொரு சுதந்திர போராட்டத்த நடத்த வேண்டிய நிலமைக்கு ஆளாகபோகிறோம்.
இதைகண்டுபிடித்து செய்தி வெளியிட்டது கொரியாவிலிருந்து வெளியாகும் வீக்லிஹாங்காங் எனும் பத்திரிக்கைதான். அதற்கான லிங்க்
ஆங்கிலத்தில் படிக்க லிங்க்
என்ன ஒரு கொடூர மனம் படைத்தவர்களாக இருக்க கூடும் இது போன்ற போலிகளை தயாரிப்பவர்கள்??
இதை மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள் நன்பர்களே
3 comments:
இவனுங்க அமரிக்காவுக்கு அனுப்பும் ஐட்டமெல்லாம் நல்லதாத்தானே அனுப்பரானுங்க, மத்தவங்களை எமாத்துரானுங்களா?
அப்படி செய்யுரானுங்கன்னுதானே ரிப்போட் சொல்லுது ஜெயதேவ், தங்கள் வருகைக்கு நன்றி
தங்கள் அருமையான பதிவை தமிழன் திரட்டியிலும் (www.tamiln.org) இணையுங்கள்.
Post a Comment