சாந்தி........... இந்த பெயர் ஞாபகம் இருக்கின்றதா...? ஆம் 2006 ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த மறு நிமிடமே அவரின் நடத்தப்பட்ட சோதனையில் பென்மைதன்மை குறைவாக உள்ளவர் என அறிவிக்கபடடு பதக்கத்தை இழந்து அவமானத்தால் இருமுறை தற்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்றபட்டவர். அவரின் இன்றைய நிலை தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சியில் நாள் ஒன்றுக்கு 200 ருபாய் சம்பளத்திற்கு செங்கல் சூலையில் வேலை செய்கிறார், இன்று நாம் ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வெல்வதற்கு எவ்வளவு சிறமப்படுகிறோம். அதற்கு காரணம் அது போன்ற திறமையான வீரர், வீராங்கனைகள் தங்களின் ஏழ்மை காரணமாக வெளிஉலகிற்கு தெரியாமல் போவதும் மற்றும் அரசியல் லாபத்திற்காக திறமையற்றவர்களுக்கு கொடுக்கபடும் முன்னுறிமையும்தான்.

தென் ஆப்ரிக்காவின் தடகள வீராங்கனை காஸ்டர் செமன்யா அவருக்கு நடத்தப்பட்ட பாலினசோதனையில் தோல்வியடைந்தாலும் அவர் நாடும் நாட்டுமக்களும் அவருக்கு உறுதுனையாக நின்று அவரை தற்போது நடைபெறஉள்ள 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வைத்ததுடன் மட்டுமல்லாது அவரை தங்கள் நாட்ட தேசியகொடியையும் ஏந்திசெல்ல வைத்துள்ளனர். ஆனால் இங்கு சாந்திக்கோ யாரும் உதவ முன்வரவில்லை மாறாக அவரை தற்கொலை முயற்சிக்குத்தான் தள்ளியிருக்கிறார்கள், அரசியல் தலைவர்களிடமோ விளையாட்டு நிர்வாகிகளிடமோ எதில் ஊழல் செய்யலாம் எனும் என்னம் தான் மேலோங்கி இருக்கின்றது , இடையே கொஞ்சமாவது இது போன்ற திறமையானவர்களையும் ஊக்குவித்து அவர்களின் உணர்வுக்கும் மதிப்பளிக்கலாமே.......
- S.ராஜ்குமார்

0 comments:
Post a Comment