மஹாராஷ்டிராவில் ஐந்து வயது சிறுவன் தனது அபார ஸ்கேட்டிங் திறைமையினால் கின்ணஸ் உலகசாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளான். ராகேஷ் தேஷ்பாண்டே எனும் சிறுவன் கோலப்பூரில் ஓர் உலகசாதனை முயற்சியாக பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சியினர் முன்னிலையில் 48.2 மீட்டர் (158ft 2in) தூரம் சுமார் 27 கார்களின் கீழே உடலை வளைத்து சறுக்கி கடந்து இச்சாதனையை படைத்துள்ளான். இதற்கு முன் மும்பையில் ரோஹன் அஜித் என்பவர் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ்த்திய 38.68 மீ (126.11) சாதனையை முறியடித்து தன்வசம் ஆக்கியுள்ளான் இந்த அபாரசிறுவன்.
அவன் செய்த சாதனையை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்,
0 comments:
Post a Comment