அமெரிக்காவைச் சேரந்த ரிமொதி டொனர் என்ற 17 வயது சிறுவன் ஹிந்தி மொழி உட்பட்ட 23 மொழிகள் பேசும் திறமை பெற்றுள்ளதனால் அறிஞர்கள் அவனை “hyperpolyglot ” பாராட்டியுள்ளனர்.
மிகக்குறகிய காலத்தில் 23 மொழிகள் பேசும் திறமை பெற்றதால் உலகம் பூராகவும் ஈர்க்கப்பட்டுள்ளான். தனது திறமையை வீடியோக்களில் பதிவு செய்து அதனை யுரியூப் வெளியிட்டதன் மூலம் உலகம் பூராவும் புகழ் பெற்றுள்ளான்.
யூதர் மொழியை முதன்முதல் படிக்க ஆரம்பித்த போதே மொழிகளில் ஆர்வம் ஏற்பட்டதாகவும் யூதர் மொழியில் ஒரு வாரத்திலேயே தேர்ச்சி பெற்றதாயும் அறியப்படுகின்றது.
நியுயோர்க் டாக்சி சாரதிகளுடன் உரையாடுதல், வெளியிடங்களில் மக்களுடன் பேசிப்பழகுதல், e- mail, Skype மூலம் உலகம் பூராகவும் மக்களுடன் தொடர்பு கொள்ளுதல் போன்றவற்றின் மூலமே இவர் மொழிப்பயிற்சியைப் பெற்றுள்ளார்.
இந்தி, அரபு, குரொஷயன், டச்சு, ஆங்கிலம், பார்சி, பிரெஞ்சு, ஜேர்மன், ஹவுசா, ஹீப்ரு, இந்தொனேசியன், இஷிஹோசா தென் ஆபிரிக்க ஆட்சி மொழி, இத்தாலி, மான்டரியன், ஒஜிப்வே அமெரிக்க பழங்குடி மக்கள் மொழி, பெர்சியன், பாஷடோ, ரஷ்யன், ஸ்பானிஷ, ஸவாஹிலி, துருக்கிஷ், வோலாப், யித்திஷ் என 23மொழிகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
டோனரின் திறமையைப் பாராட்டிய பல்லாயிரக்கணக்கான உலக மக்கள் மேலும் அவரது திறமையையும் சிறப்பையும் வெளிப்படுத்துமாறு ஊக்கமளித்துள்ளனர்.