விஜய்,விஜய்,விஜய்..........?




           


ஒரே குழப்பமா இருக்கா ஆமாம் ரசிகர்களே, விஜய் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு நல்லதலைப்பை தேடிக்கொண்டிருக்கிறார் மதராஸபட்டினம் விஜய். இந்நிலையில் தற்போது புதிய செய்தியாக படத்தின் வில்லனாக பிரபல பிண்னனி பாடகர் ஜேசுதாசின் மகனும் பிண்னனி பாடகருமாகிய விஜய் ஜேசுதாஸ் நடிக்கிறார் ஆக படத்தில் 'மூன்று விஜய்', படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இயக்குநர் விஜய் இயக்கிவரும் ”தாண்டவம்” படத்தின் ஆடியோ இன்று ரிலீஸ் ஆவது குறிப்பிடதக்கது,எனவே தனது அடுத்த படத்திற்கான வேலையை துவங்கிவிட்டார் மதராஸபட்டினம் விஜய். இளையதளபதி விஜயும் தனது துப்பாக்கி படத்தினை முடிக்கும் தருவாயில் நடித்துகொண்டிருக்கிறார், தனது அடுத்தபடம் யோகன் முடிந்தவுடன் இப்படத்தின் படப்படிப்பு துவங்கும்  என எதிர்பார்கப்படுகிறது.

தமிழனின் கட்டிடகலையின் உச்சம் ' அங்கோர்வாட் கோயில்'- ஓர் ஆச்சர்யதகவல்

இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.


இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!

இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!



இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!.

பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு "António da Madalena" என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் "is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.

பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!! பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக"ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.

இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!

இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.

நன்றி் : பார்கவி கேசவன்   (சமூக வலைதளம்)



ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!

வாழ வழியற்றுப் போவதாலும், பிழைப்பு கிடைக்காததாலும், வசதிகள் இல்லாததாலும் கிராமங்களிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் நகரங்களை நாடி வருவது உலகம் முழுக்க பொதுவான விதி. இந்த நகர்மயமாதலின் விளைவாக சென்னை போன்ற பெருநகரங்கள் மூச்சுத் திணறுகின்றன. பிளாட்பாரத்தில் கிடந்தாவது நகரத்தில் பிழைக்கலாம் என வருபவர்கள் உண்டு.



ஆனால் ‘ஒரு கிராமம் கூட்டு முயற்சி எடுத்தால், நகரங்களில் இருப்பவர்கள்கூட வேலை தேடி அங்கு ஓடிவருவார்கள்’ என்பதற்கு உதாரணமாக இருக்கிறது ஒரு சீன கிராமம். 2 ஆயிரம் பேர்கூட வசிக்காத ஒரு குக்கிராமத்துக்கு வந்து தங்கி 20 ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள் என்றால், அந்த கிராமத்தின் சாதனையை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?சீனாவின் ஜியாங்ஸு மாகாணத்தில் இருக்கிறது ஹுவாக்ஸி கிராமம். கடந்த 1961ம் ஆண்டு ஆரம்பித்து, ஐம்பது ஆண்டுகளில் இந்த கிராமத்தில் நிகழ்ந்த மாற்றங்கள், ‘வானத்துக்குக் கீழே இருக்கும் கிராமங்களில் நம்பர் ஒன் கிராமம்’ என்ற பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்த கிராமத்தின் மாற்றங்களுக்கு சில நாட்களுக்குமுன்பு பொன்விழா கொண்டாடப்பட்டது. அப்போது 328 மீட்டர் உயரமுள்ள பிரமாண்ட ஹோட்டல் இங்கு திறக்கப்பட்டது. உலகின் டாப் 15 உயரக் கட்டிடங்களில் இதுவும் ஒன்று. ஒரு கிராமத்தில் இப்படி ஒரு வானுயர்ந்த கட்டிடம் வருவதற்குக் காரணம், வூ ரென்போ என்ற மனிதர்.
ஒவ்வொரு வருஷ முடிவிலும் எவ்வளவு லாபம் வந்திருக்கிறது என்று கணக்கு பார்க்கிறார்கள். அதில் ஐந்தில் ஒரு பங்கை கிராம மக்கள் பிரித்து எடுத்துக்கொள்கிறார்கள். மீதி நான்கு பங்கு திரும்பவும் தொழில்களில் முதலீடாகிவிடுகிறது.இப்படியாக ஐம்பது வருடங்களில் இந்த கிராம மக்களின் முதலீடு ஆயிரத்து 300 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. சீன பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாகி இருக்கிறது இந்த கிராம மக்களின் கூட்டு நிறுவனம். ஒரு காலத்தில் சைக்கிள்கூட சொந்தமாக வைத்தில்லாத இந்த கிராம மக்கள், சமீபத்தில் கப்பல் போக்குவரத்து நிறுவனம் தொடங்கி இருக்கிறார்கள். சீக்கிரமே விமான நிறுவனம் தொடங்கும் உத்தேசம் இருக்கிறதாம். ஹுவாக்ஸி கிராமத்தில் இப்போது 2 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் கிராம கமிட்டியே சகல வசதிகளோடு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறது. 18 வயதைத் தாண்டிய எல்லோருக்கும் கார்கள் உண்டு. மருத்துவம், கல்வியில் ஆரம்பித்து, வீட்டுக்கு சமையல் எண்ணெய் வரை எல்லாவற்றையும் கிராமக் கமிட்டி தந்துவிடும்.பக்கத்து நகரத்துக்குப் போனால்தான் நல்ல ஆஸ்பத்திரி, நல்ல ஸ்கூல் என்ற கதை இங்கு இல்லை. உலகின் மிகத் தரமான பள்ளியும் மருத்துவமனையும் இந்தச் சின்ன கிராமத்தில் இருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் 60 லட்சம் ரூபாயாவது சேமிப்பு கைவசம் இருக்கும். ‘ஏழை’ என்ற அடையாளத்தோடு யாரையும் இந்த கிராமத்தில் பார்க்க முடியாது. சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள்தான் கிராமங்களையும் நகரங்களையும் நிர்வகிக்கிறார்கள். அப்படி இந்த கிராமத்தின் நிர்வாகிதான் வூ. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை மாட்டு வண்டிகளும் குடிசைகளுமாக லோக்கல் வரைபடத்தில்கூட இடம்பிடிக்கத் தகுதியில்லாத கிராமமாக இருந்தது ஹுவாக்ஸி. வூ ரென்போ இதை மாற்றியமைத்தார்.
வெறும் விவசாயம் மட்டுமே போதாது என்பதை உணர்ந்த அவர், கிராமக் கமிட்டி சார்பில் தொழிற்சாலைகள் உருவாக்கினார். கிராமமே அவர் பின்னால் இருந்தது. விவசாயத்தோடு தொடர்புடைய தொழில்கள், பிறகு ஸ்டீல் தொழிற்சாலை, அதன் தொடர்ச்சியாக ஜவுளித் தொழிற்சாலை என வளர்ச்சிகள் வந்தன. எல்லாவற்றுக்கும் கிராம மக்கள் எல்லோருமே முதலாளிகள்; தொழிலாளிகளும் அவர்கள்தான். ‘வளர்ச்சி தேவை என்றால் லீவ் எடுக்காமல் உழைக்க வேண்டும்’ என கிராமமே முடிவெடுத்தது. இன்றுவரை இங்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை. வாரத்தில் ஏழு நாட்களும் வேலை நாட்கள்தான்!ஒருநாள் கூட ஓய்வின்றி உழைத்தாலும், அவ்வப்போது குடும்பத்தோடு பொழுதுபோக்க சிறந்த பூங்காக்களையும் ஊரில் கட்டி வைத்திரு க்கிறார்கள். தாஜ்மகால், எகிப்தின் பிரமிடு என உலக அதிசயங்களின் மாதிரி வடிவங்களைக் கொண்ட தீம் பார்க் இங்கு ஸ்பெஷல்.இந்த கிராமத்தின் செழிப்பு எல்லோரையும் வசீகரிக்க, இப்போது அக்கம் பக்கம் கிராமங்களிலிருந்தும், தொலைதூர நகரங்களிலிருந்தும் பலர் வேலை தேடி வருகிறார்கள். இப்படி சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தந்திருக்கிறது கிராமம். இந்த கிராமத்தின் வெற்றிக் கதையை நேரில் பார்க்க, உலகெங்கிலுமிருந்து வருஷத்துக்கு 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகிறார்கள்.‘நவீன சோஷலிஸ கிராமம்’ என்ற பெருமையோடு உலகையே அண்ணாந்து பார்க்க வைத்த இந்த வெற்றிக்கதைக்குப் பின்னால் உழைப்பும் கூட்டு முயற்சியும் மட்டுமே இருக்கிறது. இந்தியாவிலும் ஏராளம் கிராமங்கள் இருக்கின்றன.முயற்சி செய்வார் யாரோ....!

சாதனை தமிழச்சியின் சோதனை நிலைமை......?

சாந்தி........... இந்த பெயர் ஞாபகம் இருக்கின்றதா...?  ஆம்  2006 ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த மறு நிமிடமே அவரின் நடத்தப்பட்ட சோதனையில் பென்மைதன்மை குறைவாக உள்ளவர் என அறிவிக்கபடடு பதக்கத்தை இழந்து அவமானத்தால் இருமுறை தற்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்றபட்டவர். அவரின் இன்றைய நிலை தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சியில் நாள் ஒன்றுக்கு 200 ருபாய் சம்பளத்திற்கு செங்கல் சூலையில் வேலை செய்கிறார், இன்று நாம் ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வெல்வதற்கு எவ்வளவு சிறமப்படுகிறோம். அதற்கு காரணம் அது போன்ற திறமையான வீரர், வீராங்கனைகள்  தங்களின் ஏழ்மை காரணமாக வெளிஉலகிற்கு தெரியாமல் போவதும் மற்றும் அரசியல் லாபத்திற்காக திறமையற்றவர்களுக்கு கொடுக்கபடும் முன்னுறிமையும்தான்.
shanthi athlet

தென் ஆப்ரிக்காவின் தடகள வீராங்கனை காஸ்டர் செமன்யா அவருக்கு நடத்தப்பட்ட பாலினசோதனையில் தோல்வியடைந்தாலும் அவர் நாடும் நாட்டுமக்களும் அவருக்கு உறுதுனையாக நின்று அவரை தற்போது நடைபெறஉள்ள 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வைத்ததுடன் மட்டுமல்லாது அவரை தங்கள் நாட்ட தேசியகொடியையும் ஏந்திசெல்ல வைத்துள்ளனர். ஆனால் இங்கு சாந்திக்கோ யாரும் உதவ முன்வரவில்லை மாறாக அவரை தற்கொலை முயற்சிக்குத்தான் தள்ளியிருக்கிறார்கள், அரசியல் தலைவர்களிடமோ விளையாட்டு நிர்வாகிகளிடமோ எதில் ஊழல் செய்யலாம் எனும் என்னம் தான் மேலோங்கி இருக்கின்றது , இடையே கொஞ்சமாவது இது போன்ற திறமையானவர்களையும் ஊக்குவித்து அவர்களின் உணர்வுக்கும் மதிப்பளிக்கலாமே.......
   
- S.ராஜ்குமார்

ஐந்துவயது சிறுவனின் அபார கின்ணஸ் சாதனை

 
indian skatting guinness record

மஹாராஷ்டிராவில் ஐந்து வயது சிறுவன் தனது அபார ஸ்கேட்டிங் திறைமையினால் கின்ணஸ் உலகசாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளான். ராகேஷ் தேஷ்பாண்டே எனும் சிறுவன் கோலப்பூரில் ஓர் உலகசாதனை முயற்சியாக  பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சியினர் முன்னிலையில் 48.2 மீட்டர் (158ft 2in) தூரம் சுமார் 27 கார்களின் கீழே உடலை வளைத்து சறுக்கி கடந்து இச்சாதனையை படைத்துள்ளான். இதற்கு முன் மும்பையில் ரோஹன் அஜித் என்பவர் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ்த்திய 38.68 மீ (126.11) சாதனையை முறியடித்து தன்வசம் ஆக்கியுள்ளான் இந்த அபாரசிறுவன்.
அவன் செய்த சாதனையை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்,



                      

மறந்துபோன தமிழனின் வீரம்,மறைந்து போன வரலாறு.....!

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.



இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் " குமரிக்கண்டம் ".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் " இறையனார் அகப்பொருள் " என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள " தென் மதுரையில் " கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, " பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம் " கபாடபுரம் " நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் " அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் " தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.





மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய " மதுரையில் " கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் " அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் " ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!!

நன்றி:தமிழ் (சமூக வலைதளம்) Source: http://www.thule.org/lemuria.html

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More